Saturday, October 14, 2006

யூடா தமிழ் சங்கம்- தீபாவளி கொண்டாட்டம்


வழக்கம் போல புதுயிடத்துக்கு போகையில் வழிதவறி முக்கால் மணி நேரம் தாமதமாகதான் போகமுடிந்தது, யூடா தமிழ் சங்கம் நடத்தும் முதல் தீபாவளி கொண்டாட்டத்திற்கு.

இதனால் நான் தவறவிட்டது ஒரு நாடகத்தையும் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டியின் முதல் பாதியும். இந்த மாறுவேட போட்டியின் உபயத்தால் இந்திய குழந்தைகளை நமது இந்திய பாரம்பரிய உடைகளில் காண முடிந்து. நன்றி! தமிழ் சங்கம்.

கலை நிகழ்சிகள் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே சிற்றுண்டியும் பறிமாறப்பட்டது. இதனால் அரங்கத்தினுல் கலை நிகழ்சியின் வீரியம் சற்று குறைந்தே காணப்பட்டது. பந்திக்கு முந்துவதுதானே தமிழனின் வழக்கம்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் தமிழ் தடுமாறினாலும் நிகழ்ச்சி தொகுப்பை திறம்படவே செய்தனர். இதற்கு, பார்வையாளர்களின் பேச்சுஒலியை குறைப்பதற்காக நல்லதொரு குடும்பம் நாடகத்திற்கு பதில் இரு குமரிகளின் (குமரிகளின் பெயர் எனக்கு தெரியவில்லை) நாட்டியத்தை அரங்கேற்றம் செய்ததை குறிப்பிடலாம்.

நல்லதொரு குடும்பம் நாடகம் சினிமாவின் நகைச்சுவை(காமடி) காட்சிகளுக்கு ஒத்த வசன அமைப்பு மற்றும் கோர்வை. ஒரிரு வசனங்களில் சற்று விரசம் இருந்தாலும் சிரிப்பு வரத்தான் செய்தது. பார்வையாளர்களின் பேச்சொலி மற்றும் ஒலி அமைப்பின் குறைபாட்டாலும்(Eco/noise of the speaker and arrangement of the Mic) இந்த நாடகம் பார்வையாளர்களை முழுமையாக சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. சென்றடைந்துயிருந்தால் இது நல்லதொரு வெற்றியை பெற்றிருக்கும்.

குழந்தைகளின் பரதநாட்டியமும், யூடா பல்கலைகலக மாணவர்களின் நடனமும் நன்றாகவேயிருந்தது. எங்கிருந்து கற்றனர் இவர்கள் இதை?

தம்போலா! எண்கள் வர்ணனைகளுடன் வாசிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிகழ்ச்சிகாக மெனக்கட்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. நிகழ்ச்சியில் வென்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இரவு சாப்பட்டிற்காக செலவிடபட்ட நேரம் சற்று அதிகம்தான். இதற்கு உணவகத்தின் திட்டமிடல் போதாமைதான் காரணம். நிகழ்ச்சி அமைப்பாளர்களை இங்கு குறை சொல்லயிலாது.

இன்னிசை கச்சேரி!!! குறை எங்கும் இல்லை இதனிடம். நல்லதொரு திட்டமிடல், பயிற்சி மற்றும் நடைமுறைப்படுத்துதல். பார்வையாளர்கள் அனைவரும் கட்டுண்டு கிடந்தனர் என்றால் மிகையாகது. அதுவும் அந்த 13 நிமிட கூட்டுபாடல் அணிசேவைகான(Team Work) மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

இளவட்ங்களின் பங்கேற்பு மேடையெங்கும் பரவியிருந்தது. இவைகளை இயக்கிய சக்திகளும், புத்திகளும் திரைக்கு பின் வெற்றிக்காக இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றன.


அமெரிக்க மண்ணில் ஒரு நல்ல தமிழ் முயற்சி.

தமிழக்கு மரணம் இல்லை!

0 Comments:

Post a Comment

<< Home