Sunday, December 03, 2006

முகவரி - இது காலத்தால் தொலைக்கப்பட்ட ஒருவனுடையது.

உலக அதிசயங்களுக்குள் ஒன்றான எகிப்திய பிரமிடுகள், தாஜ்மஹால் இதனை விட பல சிறப்பம்சங்களைப் பெற்ற ஒரு இடம் இது. ஆனால் மற்றவை பெற்றிருக்கும் புகழில் ஒரு விழுக்காடு கூட இது உலக மக்களிடம் பெறவில்லை ஆனால் அதன் சிறப்பு அம்சங்கள் என்னவென்று தெரியுமா?

கிரேட் பிரமீட் கீஷா-வை கட்டுவதற்கு தேவையான கற்களை காட்டிலும் அதிக கற்களை கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் அது.

இருபது தாஜ்மஹாலை தன்னுள் எந்த ஒரு இடநெருக்கடியும் யின்றி தன் சுற்று புற சுவற்றுக்குள் அடக்கிக் கொள்ளும் கட்டிடம் அது.

இதன் கட்டமைபிற்கு பயன்படுத்தப்பட்டவற்றில் 90 விழுக்காடுக்கும் அதிகமானது கிரைனட் எனப்படும் உலகின் கடினமான கற்களில் ஒன்றாகும்.

உலக வரலாற்றின் லட்சியவாதி அரசர்களுக்குள் ஒருவனால் கட்டப்பட்டது.

தான் சார்ந்திருந்த சமுதாயத்தின் கலைகளை கிழக்காசிய நாடுகளுக்கு பரப்பியவனால் கட்டப்பட்டது.

இந்தியாவின் தலைசிறந்த போர்வீரன் மற்றும் நிர்வாகி அவன்.

அவனது காலத்தில் உலகின் மிகச் சிறந்த கப்பல் படையின் தளபதி அவன்.

அந்த கட்டிடம் கட்டப்பட்ட பொழுது அது தான் இந்தியாவின் மிக உயரமான கட்டிடம். இரண்டாவது உயரமான கட்டிடம் அதன் உயரத்தில் 10-ல் ஒரு பங்கே?

அந்த அவன் யார் என்றும், அந்த கட்டிடம் எது வென்றும் உங்களால் யூகிக்க முடிகிறதா ?

.

.

.

அந்த அவன் பொன்னியின் செல்வன், அருள்மொழிவர்மன் என்ற இயற்பெயர்களைக் கொண்ட ராஜராஜ சோழன்.

அந்த கட்டிடம் (கோவில்) தஞ்சை பெரிய கோவில்.

தஞ்சை பெரியகோவில் கி.பி 1000 க்கும் 1010க்கும் இடைப்பட்டகாலத்தில் அருள்மொழிவர்மனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் முக்கிய கடவுள் சிவபெருமான். உலகின் மிகப் பெரிய நந்தி இந்த கோவிலின் முன் தான் உள்ளது. இந்த நந்தி 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இக்கோவிலை பராமரிக்க 100 க்கும் மேற்ப்பட்ட அர்ச்சகர்கள், 300 க்கும் மேற்ப்பட்ட நடன மாதர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இக்கோவிலுக்கான பால், மற்றும் இதர தேவைகளுக்காக 4000 பசுமாடுகள்,
7000 ஆடுகள் மற்றும் 30 எருதுகள் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்திற்கும் தேவையான பொருளாதார மூலம் ராஜராஜனாலே அளிக்கப்பட்டது.

இவனது ஆட்சிகாலத்தில் சோழசாம்ராஜியமானது இந்தியா, இலங்கை, இன்றைய சிங்கப்பூர், மலேசியா மற்றும் கம்போடியாவின் பெரும்பான்மையான பகுதிகளையும் கொண்டதாக இருந்தது .

இனி ராஜராஜனை பற்றி ஒவ்வொரு பனிமலரிலும் பார்ப்போம்.

============ END HERE =========

இணையதள வாசிப்பாளருக்காக இந்த ஆவணப்படத் தொகுப்பு. இது ராஜராஜனின் பெருமையையும் தமிழரின் பெருமையையும் உலகுக்கு உணர்த்தும் ஒன்று.

Rajaraja the Great. The great hindu king ever ruled. Historical Temples that he built.

3 Comments:

At 4:15 PM, Anonymous Anonymous said...

// கிரேட் பிரமீட் கீஷா-வை கட்டுவதற்கு தேவையான கற்களை
காட்டிலும் அதிக கற்களை கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்
அது. இருபது தாஜ்மஹாலை தன்னுள் எந்த ஒரு இடநெருக்கடியும் இன்றி
தன் சுற்று புற சுவற்றுக்குள் அடக்கிக் கொள்ளும் கட்டிடம் அது//

அட, பெரிய கோவிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய தகவல்களா?
மிகவும் வியப்புதரத்தக்க தகவல் இது. பெருமைக்குரிய தகவலும்தான்.
தேசிய அளவில் பெரிதாய் விளம்பரப்படுத்தப்பட்டு பேசப்பட வேண்டியது
மட்டுமல்ல, இந்த வரலாற்றுப் பெருமையை பாதுகாக்க வேண்டியதும்
தமிழக அரசின் கடமை!

அன்புடன்,
நம்பி.பா.

 
At 6:41 PM, Blogger இவன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நம்பி.

நமது வரலாற்று சின்னங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மற்றும் அன்று அது நமது கடமையும் கூட.

நம்மிடம் இன்னும் பலபல பொக்கிஷங்கள் உண்டு அவைகளை மிக விரைவில் பட்டியல் இடுகிறேன்.

இவன்.

 
At 1:47 PM, Blogger Vivek Natarajan said...

பெரிய கோயிலின் பெருமைகளை பட்டியலிட்டதற்கு மிக்க நன்றி. ஆனால் ஒரே ஒரு வருந்ததக்க மற்றும் வெட்க்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவ்வளவு பெருமைகளை கொண்ட பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜனின் சிலையை கோயிலின் சுற்று புற சுவற்றுக்குள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டிறுக்கிறது.

 

Post a Comment

<< Home