Friday, December 22, 2006

ஆசிரியர் உரை

ஆசிரியரிடமிருந்து....

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! - நாமக்கல் கவிஞர்


யூட்டா தமிழ்ச் சங்கத்தின் முதழ் காலாண்டு இதழான பனிமலரை அமெரிக்கத் தமிழ் நெஞ்சங்களுக்கு தயாரித்து அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இப் பணியை என்னிடம் மிகுந்த நம்பிக்கையோடு வழங்கிட்ட யூட்டா தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், நண்பருமான திரு.விவேகாநந்தன் நடராஜன் மற்றும் சங்க மேலாண்மை குழுவினர்கள் அனைவருக்கும் என் நன்றிகலந்த வணக்கங்கள்!


இவ்விதழின் முதன்மை நோக்கமாக, யூட்டா மாகணத்தில் நம் கலை, இலக்கியம், பண்பாடு என பல்வேறு விதைகள் தூவப்பட்டு, எதிர் காலத்தில் இவையாவும் பூஞ்சோலைகளாய் பூத்து, ஆலம்போல் தழைத்து அதன் விழுதுதை போல் தமிழை தாங்கி நிற்கும் என்கிர நம்பிகையில் தான்!

அன்பார்ந்த நண்பர்களே, அன்னைத்தமிழ் புதல்வர்களே கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடித் தமிழர்களே! விண்ணில் பறந்து வந்தாலும், புவியைவிட்டு நிலவுக்கே போனாலும் தமிழ் மண்ணுக்கே என்றும் சொந்தகாரர்களே யூட்டாவில் சங்கமித்தோம் தமிழுக்கு சங்கம் அமைத்தோம். நம் இலக்கு வானம் என்றால் மிகையாகது.

பல பணிகளில் ஒரு பணியாய் "பனி மலர்" காலாண்டு இதழ் இலக்கியம், கலாச்சாரம், பண்பாட்டு கட்டுரைகள், கவிபேழை, அறுசுவை, மழலை மருதம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நம் சான்றோர்களின் தமிழ் தாகம் தணிக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை!

அடுத்த பனி மலர் எதிர்வரும் தமிழ் புத்தாண்டில் மலரவிருக்கிறது. அதற்கான படைப்புகள் அனைத்து தரப்பினரிடம் இருந்து வரவேற்கப்படுகிறது.


-ராஜசேகரன்,
ஆசிரியர்,
பனி மலர்

0 Comments:

Post a Comment

<< Home