Monday, April 16, 2007

இலக்கங்களைத் தந்த இந்தியா

திரு. ஸ்ரீஸ்கந்தகராஜா லிங்கம அவர்களாள் யூட்டா தமிழ் சங்கத்தின் பனிமலருக்காக எழுதப்பட்டது.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது பொன்மொழி. ஒவ்வொரு மொழியும் ஒவ்வொருவகையான எழுத்து வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. எழுத்து வடிவம் இல்லாத மொழிகளும் இவ்வுலகிலே உண்டு.

எழுத்துக்களுக்கு வடிவங்கள் இருப்பது போன்று எண்களுக்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு. அவற்றிலே முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ள நாம் பயன்படுத்தும் எண்களை உலகுக்குத் தந்தது எந்த நாடு?

இந்தியா உலகுக்கு பல நல்ல விடயங்களைத் தந்துள்ளது. அவைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துவருகின்றன. இயற்கை வைத்திய முறைகள், யோகக்கலை, சதுரங்கம் (செஸ்) , ஆன்மீகத்தத்துவங்கள் போன்றன அவற்றுள் ஒருசிலவாகும். இவைகளைப் போலவே, எண்களையும் உலகுக்குத் தந்தது நமது இந்தியாதான்.


இந்த எண்கள் இந்தியாவில் உருவாகி, அரபு நாடுகள் வழியாக ஐரோப்பாவைச் சென்றடைந்துள்ளது. எனவேதான் இந்த எண்கள் இந்து-அரேபிய எண்கள் என்றும், அராபிய எண்கள் என்றும் சொல்லப்பட்டு வருகின்றது.

நாம் எண்களையும், எழுத்துக்களையும் இடதுபக்கத்தில் இருந்து வலதுபக்கமாக எழுதுவோம். அரேபியர்கள் அரபு எழுத்துகளை வலது பக்கத்தில் இருந்து இடதுபக்கமாக எழுதுவார்கள். ஆனால் எண்களை மட்டும் இடதுபக்கத்தில் இருந்து வலது பக்கமாக எழுதுவார்கள். இதுவொன்றே இந்து-அரேபிய எண்கள் எனக் குறிப்பிடப்படும் எண்கள் இந்தியாவில் இருந்துதான் உருவாகியுள்ளது என்பது வெளிப்படை.

அதே போல ஆறாம் நூற்றாண்டில் பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்ததும் இந்தியாதான். அரேபியர்கள் பூஜ்யத்தை சிப்ரா (SIPHER) அல்லது சைபர் (SIFR) என்றழைக்கின்றனர். இதுவே ஆங்கிலத்தில் சைபர் (CIPER or CYPHER) என்றழைக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் சுப்ரா (SUBHRA) என்ற சம்ஸ்கிருத சொல்லோடு ஒத்துவருவதால் எண்கள் நம்நாட்டில் தான் தோன்றியது என்பதற்கு இதுவும் ஒர் ஆதாரமாகும்.

தமிழிலும் எண்களுக்குத் தனி வடிவம் இருக்கின்றது. அவை பின்வருமாறு அமைகின்றது


(we need a pointer device to show the tamil numbers)

பெரும்பான்மையான தமிழ் எண்களை உற்று நோக்கும் போது, நாம் பயன்படுத்தும் இந்து-அரேபிய எண்களுடன் ஒத்து வருவதைக் காணலாம்.

குறிப்பாக தமிழ் எண் 'உ' 2 என்ற இந்து-அரேபிய எண்ணோடு ஒத்துவருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆக எண்களைக் கண்டுபிடித்தது இந்தியா என்பது வரலாற்று உண்மை என்பது மெத்தப் பெருமை தரும் அதே வேளை தமிழ் எண்களும், அதற்கு உறுதுணையாக இருந்திருக்கும் என ஒர் ஆய்வு செய்வது காலத்தின் அவசியமாகும்.

0 Comments:

Post a Comment

<< Home