அமெரிக்காவில் நான் வெடித்த பட்டாசு

இந்த வலைப்பதிவு கொஞ்சம் தாமதமாத்தான் வலையேற்றம் ஆகிறது. அதுக்கு என்னுடைய புது வேலைதான் காரணம். என் பணிநிமித்தமாக ஒரு தேர்வு எழுதிமுடிக்க வேண்டியாகவிட்டதே இந்த தாமதத்திற்கு காரணம்.
அக்டொபர் 21, 2006 காலை 7:30 மணி, அமெரிக்காவில் உள்ள பெருபான்மையான மக்களைப் போலவே எனக்கும், மற்றும் ஒரு நாளகத்தான் விடிந்தது. ஆனால் தீபாவளியை முன்னிட்டு எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு காலை 9 மணிக்கு எல்லாம் தெற்க்கு ஜோர்டான்னில் உள்ள யூடா யானைமுகத்தான் (கணேஷ்-ன் தமிழாக்கம் :-) ) கோவிலில் நான், என் மனைவி மற்றும் கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரியா சென்னையில் இருந்து உப்பு ஏரி நகரத்திற்கு வந்திருந்த என் நண்பனும் ஆஜர்.
கோவிலில் மொத்தம் பத்தே பத்து பேர்தான். தீபாவளியை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தது. எங்களைத்தவிர கோவிலில் இருந்த அனைவருமே எதாவது ஒரு வகையில் கோவில் நிர்வாகத்தில் தொடர்பு உடையவர்கள். சிற்ப்பு பூஜை என்பதால் கிட்டதட்ட இரண்டரை மணி நேரம் பூஜை நடந்தது. பூஜை முழுவதும் சம்ஸ்கிருதம் மற்றும் ஹிந்தியிலே நடந்தது. ஹிந்தி பூஜை மட்டும் ஏதோ கொஞ்சம் புரிந்தது. கட்டம் கடைசியாக நம்மவர் ஒருவர் ஒரு தமிழ் கீர்த்தனை ஒன்னு எடுத்துவிட்டார் பாருங்க, அப்பதான் எனக்கு தீபாவளியே பிறந்தது.
பூஜை முடியும் பொழுது மக்கள் எண்ணிக்கை 30யை தொட்டு விட்டது!
பூஜை முடிந்தபின் என்ன? நெய்வேத்தியம்தான், தந்த நெய்வேத்தியத்தை சாப்பிட்டு கொண்டே அங்கிருந்த அறிவிப்பு பலகையை நோட்டம் விட்டதில் தெரிந்து கொண்டது, மாலை 7:00 மணிக்கு மகா ஆர்த்தி; 7:30 மணிக்கு வானவேடிக்கை !!! என்னது வான வேடிக்கையா ? அமெரிக்காவில் ஜுலை 4-ம் தேதியை தவிர்த்து வானங்கள் வெடிக்க வேண்டும்மாயின் அது குதிரைக் கொம்பு சமாச்சாரம்.
சரி மாலை வந்துதான் பார்போமே என்று வந்தால் எனது மகிழ்வுந்தியை (அது தாம்பா Car) நிறுத்துவதற்கு தோதான இடம் கிடைக்கவில்லை. கிட்டதிட்ட 70 கும் மேற்ப்பட்ட மகிழ்வுந்துகள், அந்த சிறிய இடத்திற்கு இது கொஞ்சம் அதிகம் தான். நான் எனது வண்டியை நிறுத்த இடம் இன்றிதவித்துக் கொண்டுடிருக்கையிலே ஒரு புண்ணியாவான் கிளம்பினான் அந்த இடத்தில் எனது வண்டியை நிறுத்திவிட்டு கோவிலினுல் சென்றால் கிட்டதட்ட 300-கும் குறைவில்லாத எண்ணிக்கையிலான மக்கள், யூடாவிற்கு இது கொஞ்சம் அதிகமான மக்கள் தொகைதான்.
மக்கள் கூட்டத்தில் நம்மவரை மணந்த வெள்ளயரையும், வெள்ளையரை மணந்த நம்மவர் குடும்பத்தையும் காண முடிந்தது. இதில் ஆப்பிரிக்க அமெரிக்கரும் அடக்கம்.
மாலை பூஜை முடிந்த பின்னும் நெய்வேதியம் ;-). நெய்வேதியம் சாப்பிட்டு கொண்டிருக்கையிலே "எல்லாம் வெளியேவாங்கோ, We will fire crakers! " என்று ஒரு குரல் அழைக்க! அதற்காகவே காத்துக் கொண்டிருந்த நான் முதல் ஆளாக எனது 9 MM Digital Cameraவும் (இதுக்கு தமிழக்கம் தெரியலிங்கோ. யாரவது தெரிந்தால் சொல்லுங்க! கொஞ்சம் புண்ணியமாக போகும்) கையுமாக போய் நின்றேன், சரி வானங்களை கொழுத்துபவர் கொழுத்தட்டும், நாம் வழ்க்கம் போல் படம் பிடிப்போம் என்று தயாராகி நின்றேன்!
ஆனால் வானங்களை எல்லாம் பெரியா டப்பாவில் போட்டு பாதுகாப்பாக வைதிருந்தவர் "Come on help yourself and fire the crackers. This section for Children and these for adults" என்று உரைக்க எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை (கலிபொர்னியாவில் பொதுமக்கள் பட்டாசு கொளுத்துவது என்பது ஒரு இயலாத காரியம்).
பட்டாசு கொளுத்தும் வைபோவம் சில ஆர்வம் உள்ள குழந்தைகளால் மெதுவாக தொடங்க கொஞ்சம் கொஞ்சம்மாக சூடு பிடித்தது. பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் கலந்து கொள்ள எனக்கு அமெரிக்காவில் இருப்பது ஒரு கணம் மறந்தே போனது. இது கிட்டதட்ட 90 நிமிடங்கள் நீடித்தது.
ஸ்ரீ கணேஷ் இந்து கோவில் - தெற்க்கு ஜோர்டான் நிர்வகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த தீபாவளி கொண்ட்டாடம் இந்திய குழந்தைகளுக்கு தீபாவளி பற்றி ஒரு அனுபவப்பாடமாகவே அமைந்தது.